Monday, December 22, 2025

Readers Write In #909: ஒரு வலம் மட்டுமே


By Soorya N

This can be a brief story a couple of company world and the way a worker is taken into account and what’s getting as his most return…

முன்னுரை

பெரிய வருமானம் இல்லை. நாற்பதாயிரமோ, ஐம்பதாயிரமோ இன்னும் பார்க்கவில்லை, கேள்வி பட்டிருக்கிறேன் எல்லோரும் பேசும்போது. 

இவன் நல்ல வேலைக்காரன் , மரியாதையானவன் , என்ன சொன்னாலும் கேட்க்கும்  குணமுடையவன் . 

அடேய்! இதெலாம்மா அங்க வந்து சொல்ல போர ? எல்லாம் உன்னைய ‘cringe ‘ன்னு சொல்லுவாங்க. 

அவன் இவனை ஒரு முறை முறைத்து, மேற்கொண்டு எழுதிருக்கும் கடிதத்தை படித்தான். 

“அதனாலேயே இவனிடம் எல்லாரும் அதிக வேலையும், அரை இன்ச் எக்ஸ்ட்ரா வேலையும் வாங்குவார்கள். இவனும் எதுவும் சொல்லாமல் செய்வான். 

பார்ப்பவர்களுக்கு ஸலாம்  , பார்க்காதவர்களுக்கு ” என்ன பாக்காமயே போறேறீங்க”.  என்று துடங்கி பத்து பதினைந்து நிமிடம் உறவு கதை- தெரிந்ததோ, தெரியாததோ, இருப்பதோ, இல்லாததோ, வாயில் வரும் வார்த்தாயால் ஒரு கதையை பேசி’ உங்கள் உறவினர்கள் நலமா என்று உரையாடி, இரண்டு நிமிடம் வம்பு  பேச்சு இனாமாக பேசிவிட்டு உள்ளே வந்து உட்காருவான். 

இவை அனைத்தையும் நான் செய்ததா தான் நான் இன்று இந்த நிலைமையில் உள்ளேன். 

பொருளுரை 

இந்த வேலை ஒரு மகா கோரமாக இருந்துது . என்னுடைய மேல் அதிகாரி எந்தன் மீது காட்டிய அன்பும் , ஆதரவும்,பண்பும், மரியாதையும் ,எல்லாமே என்னக்கு எதிராகத்தான் இருந்துது .என்னிடம் கேட்ட கேள்வி , என்னிடம் சொன்ன வார்த்தைகள் , என்னிடம் சொன்ன கதைகள் , எல்லாமே என்னை இந்த வேலையில் இருக்கும் படி சொல்லவில்லை

வெளியே போயிடு ! இங்க இருக்காதா! வெளியே போ! Want so as to add some phrases 

நான் ஒரு சிறை கைதி , அவை மற்றும் தான் என் எதிரே உள்ள கண்ணாடியில் தோன்றியது .

நான் எதை நினைத்து கவலை படுவேன், என் வாழ்க்கையின் பாதை தெரியவில்லையே என்றா ? இந்த வேலை என்னுடைய நிரந்தர வேலையாக மாறுமா என்றா ?இல்லை என்னை ஒரு கைதி போல், ஒரு மனநிலை சரியில்லாத ஒருவனை போல் என் மேல் அதிகாரி நடத்தும் விதத்திலா ? எதை நினைப்பேன் , எதை நோக்கி ஓடுவேன் எல்லாமே என் கையை மீறி போய்விட்டது. போவோம்! ஓடுவோம்! ஜெயிப்போம்! என்ற வார்த்தைகள் என் தலையெழுத்தில் எழுதாதது போல் உணர்தேன்  

கடிதத்தின் இரண்டாம் பக்கம் திரும்பியது.

சில நாட்கள் கடந்தது. உண்மையாக சொல்ல போனால்’ கடத்தியது‘ என்ற பொருள் தான் இங்கே சரியானது. எப்படி நாட்கள் கடந்தது, என்ன செய்கிறேன், என்ன செய்யவேண்டும், எதுவும் தெரியவில்லை. என்னுடன் இருக்கும் எல்லோரும் என்னைவிட அதிமேதாவி என்றும், மிக பெரிய மனிதர்கள் என்றும், கணக்கில் புலி, வேலையில் சிறுத்தை, பேசுவதில் மன்னர்கள் என்றுதான் தெரிந்தது. நான் ஒருவன் மற்றும் வேறு ஒரு கிரகத்தில் இருந்து இந்த இடத்திற்கு தப்பி வந்துவிட்டேன் போல் உணர்வை தூண்டியது. எல்லோரின் பார்வையும் ஒரே இடத்தில், கண் இமை மட்டும் நொடிக்கு நொடி இடதுபுறமும் வலதுபுறமும் ஆடியது, ஒரு நாட்டிய பேரொளியின் கண்களை விட வேகமாக .

மேல் அதிகாரியின் வேலை என்ன ? என்ன செய்யவேண்டும் ? என்ன செய்தால் தன்னுடைய தொழிலார்கள் முன்னேறுவார்கள் என்ற எண்ணம் நூறு சதவீதம் இல்லையென்றாலும் , ஐந்து சதவீதம் வேண்டும். ஆனால், தன்னுடைய அதிகாரத்தை துஷ்ப்ரயோகம்  செய்து, தன்னுடைய சக்தியை மற்றவருக்கு தீய சக்தியாக பயன்படுத்தும் அதிகாரிகள், மேல் அதிகாரிகளா ?

நேரங்களும், நாட்களும் கொஞ்சம் வேகமாகதான் ஓடியது. இவனின் வேலை என்னவென்று இவனுக்கு தெரியவில்லை, கூட வேலை பார்க்கும் எல்லோரும் பெரிதாக இவனிடம் பேசவில்லை, எல்லாம் அவர்களுடைய அதிகாரியின் கட்டளையில் வாழ்கிறார்கள். இவனும் அமைதியாக இருந்தான். தினமும் வந்தான், உட்கார்தான், சென்றான். ஓரிரெண்டு நாளில் இவனுக்குள் ஒரு நினைப்பு வந்தது, இங்கே பணிபுரிய மிக அத்தியாவசியமான ஒன்று, இருக்கும் நாட்களை பயன்படுத்தவும், இவர் தான் என் மேல் அதிகாரி, இவருடன் நான் பயணிக்க துடங்குகிறேன். அதற்க்கு தயார் ஆனான். 

மறுநாள், ஒரு செய்தி வந்தது. எங்களுக்கு புதிய ஒரு அதிகாரி வருகிறார் என்னும், என்னுடைய முதலும் முக்கியமான மேல் அதிகாரி அவர் தான் என்னும் , இவரே அதற்க்கு கீழ் தான் என்னும் சொல்லி ஒரு செய்தி வந்தது. அப்பொழுதான் யோசித்தேன், ‘அட பாவீங்களா’ அப்போ இத்தனை நாள் இருந்தவர் யாரு ? எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இப்போதுதான் பொறுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வந்துள்ளேன், இப்பொழுது அவர் யார் ? எப்படி இருப்பார், என்ன கேட்பார், இவரே இத்தனை கேள்விகள் கேட்கிறார், அவர் என்ன சொல்லுவார் ? என்னிடம் முறைப்பாரா, சிரிப்பாரா, என் பாஷை அவருக்கு புரியுமா ? இந்த உலகம் எப்படி இருக்க போகிறது ? என் மனதில் ஏராளமான கேள்விகள் எழுந்து கொண்டே இருந்துது..

எல்லாமே என் எதிரியாகதான் அமைந்திருந்தது. புது மேலதிகாரி, புது கண்காணிப்பாளர், புது அரை, நறிய புது முகங்கள், புது வார்த்தைகள், மெட்ராஸ் பாஷை, ‘மச்சியில்’ இருந்து’  தோல் மீது கை போட்டுகொண்டு பேசும் நண்பர்கள்’ கேரளா தமிழ், செந்தமிழ், அய்யர் பாஷை, ஆங்கில தமிழ் பாஷை, இனிமை குரல்கள், கரகர குரல்கள், பேசும் வார்த்தை புரியாமல் பேசும் மொழி, முறைத்த குரல், கீச்சு குரல், இப்படி பல்வேறு முகங்களும், பேச்சுகளும் அமைந்த ஒரு நிறுவனமாக மாறி இருந்துது. 

இவை அனைத்துமே இவனுக்கு புதுமையாகவும் பயமாகவும் இருந்தது. யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாத யோசனை. யாரிடம் உதவி கேட்பது, வெட்கமாக இருக்குமே என்ற யோசனை. நம்மை கேவலமாக நினைத்தால் என்ன செய்வது,’பரவாயில்லை’ நம் வெட்கத்தை, கால் வாசி பயத்தை  விட்டுவிட்டு தான் இங்கே நீந்த முடியும்,கரையேற முடியும்  . நீந்த தெரியவில்லை என்றாலும் தண்ணீரில் குதிப்பதுதான் மேல் . குதித்துவிட்டு கற்றுக்கொள்வோம் என்று தைரியம் இல்லாமல் குதித்துவிட்டான். 

மக்கள் அவன்மீது காட்டியது அன்பா, கலாய்ப்பா, பாசமா என்றே அவனுக்கு புரியவில்லை. தினமும் அவன் நிறுவனத்திற்கு போவது பெரும்பாடாக இருந்துது, தினம் ஒருவராவது அவனை கேலி செய்வது போல் பேசாமல் இருக்க மாட்டார்கள். அவனும் எதுவும் சொல்லாமல் போவான். போருக்கு போய்வந்துவிடலாம் , ஆனால் இவர்களுடன் போயி  ஓரூ ஆறு மணிநேரம் இருப்பது பெரும் பாடு . இதற்க்கு மத்தியில் சிறிய சலசப்பு பேச்சுகள். கிசு கிசு காதல் கதை, குடும்ப கதை, சைகை பாஷைகள் . இந்த சைகை பாஷைகள் பற்றி கொஞ்சம் பேசுவோம்- என்ன பேசுவார், எதை பற்றி பேசுவார் என்றே புரியாது, ஒரு முணுமுணுப்பு சப்த்தம் கேட்கும், அதுவும் அதை மதியம் உணவுக்கு பிறகு பேசுவார்கள், நன்றாக தூங்கக்கூடிய நேரம் அது, அதற்காகவே அதை அவன் விரும்பினான். பல கதைகள் கேட்கலாம், ஆனால் ‘ஏன்’ என்று மட்டும் கேட்க கூடாது. இதுதான் அவன் கற்றுக்கொண்ட பாடம். நாட்கள் வாரம் ஆனது, வாரம் வாரங்களாக மாறியது,வாரங்கள் மாதங்களாக மாறியது. ஆறு மாதம் போய்விட்டது – சம்பள உயர்வு – ஊதிய விவாதம் என்றல்லாம் உரையாடல்கள் செய்தனர். என்னிடமும் அந்த வாசனை கொஞ்சம் வராத என்று எண்ணினேன், வந்தால் சுகம்தான், வராவிட்டாலும் போதும்தான் , ஏனென்றால், நான் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம் என்று தெரியும். அதனால், எதிர்பார்ப்பு இல்லை, வந்தால் அமிர்தம் ,வராவிட்டால் கஷாயம் என்று சொல்லி மனதை சமநிலை படுத்திக்கொண்டேன். 

அதிர்ஷ்டம்அவனை  எட்டிபார்க்குமா

பற்றாக்குறை ஜாஸ்தியாதான் இருக்கு, இருந்தாலும் நான் ரொம்ப கேட்கலை, ஒரு அளவுக்கு கொடுத்தா நல்லா இருக்கும், என் அதிகாரி, பார்த்தார், ரெண்டு மூணு கட்டம் போட்டார் அவரின் கம்ப்யூட்டரில் , புள்ளி விவரம் போல் ஏதோ ஒன்றை தட்டிக்கொண்டே இருந்தார். 

இரண்டு மூன்று நிமிடம் அதேயே பார்த்துக்கொண்டிருந்தேன், தூக்கம் வந்தது. 

அவர் பேசினார்” நீ இப்போ இதெல்லாம்தான் பண்ற” இன்னு நரியா வேலை எடுத்து பண்ணு” இப்போ போயி நா மேனேஜர் கிட்ட பேசினா, இவ்ளோதான் பாக்குறான்- எப்படி குடுக்கறதுனு சொல்லுவாங்க, அதே நா சொல்ற வேலைய இன்னு கொஞ்ச எடுத்து பண்ணு’ அப்டி பண்ணா ‘நாம பேசும்போது இதயே அவங்ககிட்ட காமிச்சு பேசலாம்’ என்றார். அவனுக்கு ஒரு நம்பிக்கை முளைத்தது, உற்சாகம் வேற வந்தது, அவர் சொன்ன அனைத்துக்கும் ‘தலையிட்டு” பொம்மை ஆனான். அவரின் வாகு பலித்ததா தெரியவில்லை, அனால் அவனுக்கு உயர்வு கிடைத்தது- சிறிய காசாக இருந்தாலும் அன்று அது அவனுக்கு ஒரு குட்டி உற்சாகத்தை தந்தது. 

 இன்னும் ஒரு சிலரும்’ நன்றாக பேசு, சுறுசுறுப்பாக பேசு’ தைரியம் வளர்த்துக்கொள் என்றெல்லாம் சொன்னார்கள். எல்லாமே அவனுக்கு வேதவாக்காக மாறியது. யாரையாவது பார்த்தால்’ ஸலாம் போடாமல்’ ஸலாமை யார்’ வைக்க சொன்னது வரைக்கும் கதை பேசுவான். 

அவனுக்குள் ஒரு நப்பாசை’ இதுக்கே இந்த ஊதியம் தந்திருக்காங்க, அப்போ அடுத்த வருஷம் கண்டிபா தருவாங்க என்று நம்பினான். 

தெரியாத வேலையை தெரிந்தது போல் காட்டினான். எல்லோரிடமும் ஒரு சிரிப்பு, ஒரு முறுக்கு, ஒரு வழக்கு என்று பழக துடங்கினேன். இவனின் குழு பெரிதாக மாறியது, இவன் பார்க்கும் வேலை’ அதிகம் என்று சொல்வது நின்று’ இப்போதெல்லாம் அவன் மட்டும்தான் எல்லாவற்றையும் பார்க்கிறான்’ என்று பேசப்பட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக இவனுடைய பெயர் எல்லார் வாயிலிருந்தும் சொல்ல பட்டது. இடையே ஒன்னு இரண்டு கல்யாணங்கள் வந்தது, முகவரி தெரியாவிட்டாலும், கம்பெனியில் வேலைபார்க்கிறார்கள் என்பதால் போனான், பார்ப்பவருக்கு ஒரு சிரிப்பு, பார்க்காதவருக்கு’ மிக்க நன்றி” சொல்லி வெளியேறினான். 

கிடைக்கும் வேலைகள் அனைத்துமே செய்தான், தேவையற்ற வேலை , சம்மந்தம் இல்லாத துறையின் வேலை, எல்லோரிடமும் நட்பு, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கொஞ்சம் சிரித்து பேசுவது. எல்லா துறையிலும் ஒரு பெயர், நல்லா பெயர் எடுத்தான். இவனின் வேலைக்கு ‘இவனுக்கு நல்லா ஊதியம் தர வேண்டும் என்று பேச்சு அடிபட்டது. அதை யாரும் நிராகரிக்கவில்லை, எல்லோருமே அதை சம்மதித்தர், அவனை உற்சாக படுத்தினார்கள். அவனுக்கு நிஜமாகவே இது ஒரு நல்லா அனுபவம் என்று நம்பினான், இங்கே வரும்போது, பேச தயங்கினான், சிரிக்க யோசித்தான், யாரை எங்கே சந்திப்பது என்று தேடினான், இவனுக்கு பேசிவரும் என்று கேள்வி எழுப்பினார்கள், இவன் சரியாக செய்கிறானா என்று பலரையும் கேட்டார்கள்.  இவனின் குழு அதிகாரி இவனுக்கு ஊக்கம் அளித்தார். அவனின் குழுவும் நறிய விஷயங்கள் கற்று கொடுத்தனர் கற்றுக்கொண்டான். அவனின் வேலையும் அவனுக்கு நன்றாகவே இருந்தது. அடுத்த வருட ஊதியத்தை பற்றி பேசினார்கள், ஊதிய உயர்வு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இவனுக்கு அதனால் எந்த கவலையும் இல்லை, ஏனென்றால் இவன் அளவுக்கு மீறிய வேலைகள் செய்கிறான், இவனுக்கு நிச்சயம் உண்டு என்று சொன்னார்கள். 

ஊதிய மாதம் வந்தது,எல்லோரும் இவனுக்கு வரும் என்று நம்பி இருந்தார்கள், அவனும் நம்பி இருந்தான், முதல் மாதம் ஊதியம் வந்தது- மாற்றம் இல்லை, காரணம்-இன்னும் அதை பார்த்து கையெப்பம் இடவில்லை என்று சொன்னார்கள். 

அடுத்தமாதம் நிச்சயம். ….

வேலைகள் கூடின, எப்போதோ செய்த தவறான வேலைகள் இப்போது சரியாக செய்யப்பட்டது. எங்கே போனாலும் இவனின் பெயர் வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தான். இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்யும் வேலையை இவன் ஒருவன் செய்கிறான் என்று தெரிந்தது. 

அடுத்த மாதம் சம்பளம் வந்தது- மாற்றம் இல்லை- காரணம்- மேல் அதிகாரி கேட்டு சொல்கிறேன் என்று சொன்னார். 

கேட்டார்….கேட்டார்…கேட்டார். மாதம் முடிவு வந்தது. 

இன்னும் வேலை நன்றாக இருந்துது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. 

மாதம் முடிந்தது, அவர்களுக்கான வேலையும் முடிக்கப்பட்டது. 

குழு முன்னணையிடம் போயி கேட்டால்- பேசினேன், கேட்டேன் என்றுதான் சொல்கிறார். அதை நம்பாமலும் இருக்க முடியாது. நம்பினான். வேலை வேலை வேலை என்று பைத்தியக்காரன் போல் செய்தான். வேலை அவனுடைய பாதி நேரத்தை கடத்தியது. அவனின் பிடித்த வேலைகளையே விட்டுவிட்டு நிறுவனம் வேலைதான் முக்கியம் என்று ஓடினான். 

எதற்க்கு ? சம்பள உயர்வுக்கு.. 

அடுத்த மாதம்- ….மாற்றம் இல்லை. லேசாக நம்பிக்கை இழந்தான். குழு முன்னணியிடம் சொன்னான், பேசினான், இத்தனை வேலையின் திருத்தங்களை பற்றி சொன்னான், எத்தனை வேலை பார்க்கிறான் என்றும் சொன்னான், அவரும் ஒப்புக்கொண்டார். இவனுக்கு நம்பிக்கை போய்விட்டது, வேலையை மற்றும் செய்கிறோம் என்ற நினைப்பு வந்தது. குழு முன்னணி – மேல் அதிகாரியிடம் போயி பேசுகிறேன் என்றார். பேசிவிட்டு அவருக்கும் ஏனென்று புரியவில்லையாம் என்று சொன்னாராம். 

இவன் எதுவும் பேசாமல் விட்டுவிட்டான்.

அடுத்த மாதம் – சம்பளம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வந்தது. அவன் முடிவு எடுத்துவிட்டான், இம்முறை போயி பேசவேண்டும் என்று- அவனின் குழு முன்னணியே அவனை அழைத்து செல்கிறேன் என்றார். 

                                              ________________

பேசிவிட்டு வந்தான் ,அதற்க்கு பின் வேலை செய்தான், ஆனால் ஒருவித பிரமையில் இருந்தான் .எல்லோரும் கொஞ்சம் சலசலப்பாக பேசும்போல் தெரிந்தது இவனை பற்றி .இவனை பார்த்து சிரித்தார்கள், பாவம் என்றார்கள், ஒரு முழு அறையும் இவனையே பார்த்து பேசுவது தெரிந்தது. ஆனால் இவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இவன் உண்டு தன் வேலையுடனுனு செய்துகொண்டு வந்தான். இவனுக்கு இருக்கக்கூடிய அதே குழு, அதே மக்கள், அதே பாசம் எல்லாமே நன்றாகவே இருந்தது, இப்போது அது கொஞ்சம் அதிகமாகவே வெளிவந்தது . அவனுக்கு அது உணரமுடிந்தது. அவனின் வேலை என்னவோ அதிகமாகத்தான் இருக்கிறது, அவன் அதை ரசித்து செய்கிறானா என்பது நம்மக்கு தெரியவில்லை  , இப்போதும் யார் என்ன சொன்னாலும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்துவருகிறான்  இந்த மனம் உருகிய வேலைக்காரன். .

உள்ளே சென்று மேல் அதிகாரியிடம் பேசினான் என்பது தெரியும். அவர் அவன் கேட்ட ஊதியத்தை வழங்கினார் , அவனால் ஆயிர ரூபா கட்டை பார்க்க முடிந்ததா, அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததா. அவனின் குழி முன்னணியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ?இவையெல்லாமே ஒரு கேள்வி குறிதான்.

                                              முடிவுரை

குழு முன்னணி தன்னுடைய அதிகாரியிடம் போயி  அவனுக்கு நான்காம் மாதமும் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லாததை சொன்னார் . பேசினார்.அவர் அதற்க்கு ‘ இத்தனை நாட்கள் சொல்லாத ஒரு கதையை சொன்னார் “அவன் யாரிடமும் சரியாக பேசுவதில்லை” இந்த அறைக்கே பெரிதாக வருவதில்லை, அவனுண்டு அவன் வேலையுண்டுனு அங்கேயே தான் இருக்கிறான், என்று சொல்லிருக்கார். இவர் உடனே அவனை அழைத்து வர சொன்னார். இவனும் ஒருமுடிவோடு சென்றான். 

அறையின் வெளியே நின்றான், ஒருசிலர் இவனை பார்த்து புன்னகைத்தார்கள். இவனும் பதிலுக்கு…

.உள்ளே சென்றான். 

அதிகாரி இவனிடம் தன்னுடைய வேலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். 

வேலையாளம்  நல்லாதான் போகுது, கொஞ்சம் ஊதிய உயர்வு கேட்டு ஒரு மூணு மாசமா கேக்கறேன் ஆனா, எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றான். 

அதிகாரி: இல்லையே, பன்னிர்ப்போமே, உங்களுக்கு இப்போ வர சம்பளமே உயர்வு பண்ணிதான் வருது என்றார். 

இவனுக்கு குடுத்த உயர்வு- எட்டுநூத்திஐம்பது ரூபா , பிறகு ஏற்றி குடுத்தது நூற்றிஐம்பதுரூபா.

இவன் பார்த்த வேலைக்கு குறைந்த பட்சம் ‘ ஐயாயிரம் அல்லது, அதற்க்கு மேல் குடுக்க வேண்டும்.

அதிகாரி: உங்களுக்கு இவளவு பண்ணி கொடுத்ததே பெருசு, இதுவே நான் போய் என்னுடைய அதிகாரியிடம் பேசிவிட்டு செய்துள்ளேன், இதற்க்கு மேல் கேட்டால்….

“இப்பொழுது சொன்ன வார்த்தைகள் , ஒரு விதமாக மிரட்டி பேசுவது போல்தான்  இருந்துது..

இதை சொல்லக்கூடாது, இருந்தாலும் உங்களுக்கு புரியவேண்டும் என்று சொல்கிறேன்” என்றார் .

” இதற்க்கு மேல் கேட்டால், “நம்ப வேற ஒரு ஆள எடுத்துக்கலாம், இவன் ஒருத்தன்தான், ஆனால், நாம்ப இவனே மாதிரியே இன்னு மூன்று பேரை எடுத்துக்கலாம், அவங்ககிட்ட வேலைய வாங்கிக்கலாம்  என்று சொல்வார் என்றார்.” அதிகாரி. 

என்ன சொல்லமுடியும் அதற்க்கு பிறகு ? இவன் ஒன்றை நம்பி வேலைசெய்தான். ஆனால் ,அவை அனைத்தும் இப்போது கனவாகி போனது. அவரை எதிர்த்து பேச முடியுமா , இல்லை, அவரின் குழு முன்னணியிடம் போயி , சொன்னீர்களே , செய்தீர்களா என்று வசனம்தான் பேச முடியுமா ? எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்தான்.

அந்த அறையில் அதற்க்கு பிறகு மௌனம்தான் நிலவியது. பேச்சு சப்தம் நின்றது. இவன் அவனின் குழு முன்னணி சொன்ன வார்த்தைகளை நினைத்துக்கொண்டான், இப்போது அதிகாரி சொன்னதையும் நினைத்துக்கொண்டே “அந்த அறையை விட்டு வெளியேறினான்” அந்த வேலைக்காரன்..

ஒரு சராசரி மனிதன் என்ன செய்வான் இந்த இடத்தில். அவனுக்கு சொன்ன வாக்குறுதியும் காணாமல் போனது, கனவும் அவனுடைய வருங்கால திட்டங்களும் ஒத்திவைக்க பட்டது. எத்தனை வேலை செய்தும், எல்லோரிடமும் நல்ல பெயரெடுத்தும் , கடைசியில் கிடைத்தது என்னவோ” ஏமாற்றம்”தான் , இவனும் இந்த நிறுவனத்திற்கு “ஒரு வளம் மட்டுமே”

                                                             ஒருவலம்மட்டுமே

                                                                                                            முற்றும் 

Related Articles

Latest Articles